ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா கூட்டாட்சி தத்துவத்துக்கே ஆபத்து: மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

4 weeks ago 6

டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்ததற்கு மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் இன்றைய தினம் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் மசோதாவை அறிமுகம் செய்தார்.

மக்களவை, சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான மசோதா, யூனியன் பிரதேசங்கள் தொடர்பான மசோதா அறிமுகம் செய்தது. மக்களவை, மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முதல் மசோதா வழி வகுக்கும். யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்த இரண்டாவது மசோதா வழி வகுக்கும். மக்களவையில் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை இருந்தால் மட்டுமே இந்த மசோதா நிறைவேறும்.

* திமுக

ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல் நடத்துவது சாத்தியமற்றது. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்ததற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்த கூடுதலாக சுமார் 13,000 கோடி செலவாகும் . மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்ப திமுக எம்.பி வலியுறுத்தியுள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். போதிய பெரும்பான்மை இல்லாதபோது மசோதாவை கொண்டு வருவது ஏன். ஒரு அரசை 5 ஆண்டுகளுக்கு தேர்வு செய்வதற்கான உரிமை வாக்காளர்களுக்கு உள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதற்காக அந்த உரிமையை நாம் ஒடுக்க முடியாது என்று தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

* சமாஜ்வாதி கட்சி

அகிலேஷ் யாதவ் சார்பில் இந்த மசோதாவை கடுமையாக எதிர்க்கிறோம் . மத்திய அரசுக்கு அருதி பெரும்பான்மை கிடைக்காமல் நாடாளுமன்றம் கவிழும் நிலை ஏற்பட்டால் ஒட்டுமொத்த நாட்டிற்கும் தேர்தல் நடத்துவீர்களா. ஒரே நாடு ஒரே தேர்தல் என்று கூறும் உங்களால் நாடாளுமன்ற தேர்தலை கூட ஒரே கட்டமாக நடத்த முடியவில்லை. ஒரே தேர்தல் மசோதா அரசியல் சாசனத்திற்கும் கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரானது என்று சமாஜ்வாதி கட்சி கூறியுள்ளது.

* திரிணாமூல் காங்கிரஸ்

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை திரும்ப பெற வேண்டும். மசோதா நமது அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்புகளுக்கு எதிரானது. சட்ட மசோதா பிரிவு 83, 82 ஆகியவற்றில் செய்யும் திருத்தங்கள் ஒன்றுக்கொன்று முரண்பாடானது. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தேர்தல் சீர்திருத்தம் அல்ல. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை ஒருபோதும் ஏற்க முடியாது. ஒருவரின் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. அனைத்து அதிகாரத்தையும் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்துவிட முடியுமா என்று திரிணாமூல் காங்கிரஸ் கல்யாண் பானர்ஜி கூறியுள்ளார்.

The post ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா கூட்டாட்சி தத்துவத்துக்கே ஆபத்து: மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article