புதுடெல்லி: உலகம் முழுவதும் உள்ள முன்னணி இதழ்களில் வெளியிடப்படும் ஆய்வுக் கட்டுரைகளை உயர் கல்வி மாணவர்கள் படித்து பயனடையும் வகையில் ‘ஒரே நாடு, ஒரே சந்தா’ திட்டம் வரும் ஜனவரி 1ம் தேதியில் தொடங்கப்படுவதாக ஒன்றிய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் ஏ.கே.சூட் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் மூலம் அரசு நிதி உதவி பெறும் உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் 1.8 கோடி மாணவர்கள் பயனடைவார்கள். இதில், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவம், கணிதம், மேலாண்மை, சமூக அறிவியல் மற்றும் மனிதநேயம் ஆகியவற்றை உள்ளடக்கிய 13,400க்கும் மேற்பட்ட சர்வதேச இதழ்களில் வெளியான ஆய்வுக் கட்டுரைகளை மாணவர்கள் படிக்கலாம்.
The post ஒரே நாடு ஒரே சந்தா ஜன.1ல் தொடக்கம் appeared first on Dinakaran.