ஒரே காரில் கோர்ட்டிற்கு வந்து விவாகரத்து கோரிய ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி

1 day ago 3

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வளம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர், கடந்த 2013-ம் ஆண்டு பின்னணிப் பாடகி சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அன்வி என்ற மகள் உள்ளார். கடந்த 12 வருடங்களாக ஒன்றாக இருந்த இருவரும் சமீபத்தில் பிரிவதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று ஒரே காரில் இருவரும் சென்னை குடும்ப நல கோர்ட்டிற்கு வந்து பரஸ்பர விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல கோர்ட்டு நீதிபதி செல்வ சுந்தரி முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜி.வி. பிரகாஷ், சைந்தவி, இருவரும் நேரில் ஆஜராகி, இருவரும் மனமுவந்து பிரிவதாகத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார். பின் இருவரும் ஒரே காரில் புறப்பட்டுச் சென்றனர்.

Read Entire Article