சேலம்: “சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை வீழ்த்த தயராக இருக்கிறோம். எங்களுக்கு ஒரே எதிரி திமுகதான். மற்ற கட்சிகள் எங்களுக்கு எதிரி கிடையாது” என்று பாஜக உடன் கூட்டணியா என்ற கேள்விக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சூசகமாக பதிலளித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி இன்று (மார்ச் 4) நடந்தது. இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறியது: “மாற்றுக் கட்சியினர் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.