புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷி தவான் சர்வதேச மற்றும் உள்நாட்டு டி20 & ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். உள்ளூர் மற்றும் ஐ.பி.எல். தொடரில் ஆல்ரவுண்டராக சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதன் மூலம் இந்திய அணியில் 2016-ம் ஆண்டு அறிமுகம் ஆன அவர் இதுவரை 4 சர்வதேச போட்டிகளில் ( 3 ஒருநாள் மற்றும் 1 டி20 போட்டி) விளையாடியுள்ளார்.
இருப்பினும் அந்த வாய்ப்பில் சிறப்பாக செயல்படாததால் அணியிலிருந்து நீக்கப்பட்ட அவர், அதன்பின் இந்திய அணியில் விளையாடவில்லை. உள்ளூர் மற்றும் ஐ.பி.எல். தொடரில் மட்டுமே விளையாடி வந்தார்.
இந்நிலையில் 34 வயதான அவர் சர்வதேச மற்றும் உள்நாட்டு டி20 & ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இருப்பினும் ரஞ்சி கோப்பை தொடரில் தொடர்ந்து விளையாட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.