ஒருநாள் கிரிக்கெட்: டிராவிஸ் ஹெட்டுக்கு எதிராக புதிய சாதனை படைத்த வருண் சக்ரவர்த்தி

6 hours ago 2

துபாய்,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதன் முதலாவது அரைஇறுதியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 264 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஸ்டீவ் சுமித் 73 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டும், வருண் சக்ரவர்த்தி, ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 265 ரன்கள் இலக்கை நோக்கி பேட்டிங் செய்த இந்திய அணி 48.1 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 267 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 84 ரன்கள் அடித்தார். அவரே ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இதில் டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை இந்திய சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தி ஆட்டத்தின் 9-வது ஓவரில் வீழ்த்தினார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் முதல் 10 ஓவர்களுக்குள் டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை கைப்பற்றிய முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற புதிய சாதனையை வருண் படைத்துள்ளார். 

Read Entire Article