ஒருநாள் கிரிக்கெட்; அறிமுக ஆட்டத்தில் அதிக ரன்கள்... சாதனை படைத்த பிரீட்ஸ்கே

3 months ago 13

லாகூர்,

பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் ஆடி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 304 ரன்கள் குவித்தது.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக அறிமுக வீரரான மேத்யூ பிரீட்ஸ்கே 150 ரன்கள் குவித்தார். தொடர்ந்து 305 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து ஆடி வருகிறது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் 150 ரன்கள் எடுத்ததன் மூலம் தென் ஆப்பிரிக்காவின் மேத்யூ பிரீட்ஸ்கே மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

அதாவது, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன முதல் போட்டியிலேயே அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற மாபெரும் சாதனையை மேத்யூ பிரீட்ஸ்கே (150 ரன்) படைத்துள்ளார். இதற்கு முன் இந்த சாதனை பட்டியலில் வெஸ்ட் இண்டீஸின் டேஸ்மாண்ட் ஹெய்னஸ் (148 ரன், 1978) முதல் இடத்தில் இருந்தார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன முதல் போட்டியிலேயே அதிக ரன்கள் எடுத்த வீரர்:-

மேத்யூ பிரீட்ஸ்கே (தென் ஆப்பிரிக்கா) - 150 ரன் (எதிரணி நியூசிலாந்து, 2024)

டேஸ்மாண்ட் ஹெய்னஸ் (வெஸ்ட் இண்டீஸ்) - 148 ரன் (எதிரணி ஆஸ்திரேலியா, 1978)

ரஹ்மனுல்லா குரபாஸ் (ஆப்கானிஸ்தான்) - 127 ரன் (எதிரணி அயர்லாந்து, 2021)

மார்க் சாம்ப்மென் (நியூசிலாந்து) - 124 * ரன் (எதிரணி யு.ஏ.இ, 2015)

காலிங் இங்க்ராம் (தென் ஆப்பிரிக்கா) - 124 ரன் (எதிரணி ஜிம்பாப்வே, 2010)

Read Entire Article