
சென்னை,
ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு மையத்தை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார் .
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் - மகளிர் என அனைத்து தரப்பினரும் பயன்படும் வகையில் ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு மையத்தை டாக்டர் பெசன்ட் சாலையில் அமைத்துள்ளோம். ரூ.2.04 கோடி செலவில் இந்த திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு மையத்தினை பயன்படுத்தி வாழ்வில் சிறக்க நம் தொகுதி மக்களுக்கு என் அன்பும், வாழ்த்தும்.என தெரிவித்துள்ளார் .