
வேலூர்,
காட்பாடியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி: ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் தந்தை வழியை முதல்-அமைச்சர் பின்பற்றவில்லை என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளாரே?.
பதில்: என்ன ஒரு சிறு பிள்ளைத்தனமான பேச்சு இது. ஒரு மத்திய மந்திரி இப்படியா பேசுவது.
கேள்வி: தமிழகத்துக்கு பிரதமர் மோடி வருகிறார் என்பதற்காக பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கப்பட்டதா?.
பதில்: மோடிக்காக கோடி கொடுத்தார்கள் என்கிறீர்களா...? எதற்காக இருக்கும், என்று நீங்களே சொல்லுங்கள்.
கேள்வி: 2029-ம் ஆண்டு முதல் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த பணிகள் தொடங்கும் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியது குறித்து?.
பதில்: ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது எல்லாம் எந்த காலத்திலும் நடக்காது. ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே சாமியார், ஒரே சாப்பாடு இதெல்லாம் நடக்காது. இவ்வாறு அவர் கூறினார்.