ஒரு நொடிக்கு ரூ.10 லட்சம் சம்பளம் வாங்கிய தமிழ் நடிகை ..யார் தெரியுமா?

4 hours ago 2

சினிமா உலகில் ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் நடிகைகள் பலர் இருக்கிறார்கள். பாலிவுட் உலகில் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் உள்ளிட்ட நடிகைகள் பல கோடிகளை சம்பளமாக வாங்குகிறார்கள். தென் இந்திய பட நடிகைகளை எடுத்துக்கொண்டால், சாய் பல்லவி, நயன்தாரா உள்ளிட்ட நடிகைகள் லிஸ்டில் முன்னணியில் இருக்கிறார்கள். திரைப்படங்கள் மட்டுமின்றி விளம்பரங்கள் மூலமாகவும் பல முன்னணி நடிகைகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. சில நொடிகள் மட்டுமே ஓடக்கூடிய விளம்பரங்களுக்குக் கூட கோடிகளில் சம்பளம் வாங்குகிறார்கள்.

அந்த வகையில், ஒரு நொடிக்கு 10 லட்சம் சம்பளம் வாங்கியிருக்கிறாராம் பிரபல தமிழ் நடிகை. அவர் வேறு யாருமில்லையாம்... லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்ட நயன்தாரா தானாம். நயன்தாரா, டாடா ஸ்கை நிறுவனத்தின் விளம்பரத்தில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இந்த விளம்பரம் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு சுமார் இரண்டு நாட்கள் நடந்தது.

50 வினாடிகளுக்கு ஒளிபரப்பாகும் விளம்பரத்துக்கு சுமார் 5 கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது, ஒரு நொடிக்கு 10 லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்கியிருக்கிறாராம். 2005 ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் கோலோச்சி வரும் நயன்தாரா, தற்போது ஒரு படத்திற்கு சுமார் 10 கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாகச் சொல்லப்படுகிறது. நயன்தாராவின் சொத்து மதிப்பு 200 கோடி ரூபாய் இருக்கும் எனவும், அவருக்கு சொந்தமாக ஒரு தனியார் ஜெட் இருக்கிறதாம். இதன் விலை மட்டும் 50 கோடி ரூபாய் இருக்கும் என்று பிரபல ஆங்கில செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Read Entire Article