ஒரு நாள் தொடர் இன்று துவக்கம் சாதிப்பரா இந்திய மகளிர்? மல்லுக்கு நிற்கும் வெஸ்ட் இண்டீஸ்

4 weeks ago 6

வதோதரா: வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியுடனான ஒரு நாள் தொடர், வதோதராவில் இன்று துவங்குகிறது. இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. நவி மும்பையில் நடந்த டி20 போட்டிகளில் இந்திய மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் ஒருநாள் தொடரின் முதல் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் இன்று நடக்கிறது. 2, 3வது போட்டிகள் முறையே டிச.24, 27 தேதிகளில் நடக்கின்றன.

டி20 தொடரை வென்ற ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியில் பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. தவிர, தேஜல் ஹசாப்னிஸ், பிரதிகா ராவால் ஆகியோர் புதிதாக அறிமுகமாக உள்ளனர். ஆல்ரவுண்டர்களில் சஜனா சஜீவன், ராகவி பிஸ்ட் ஆகியோர் நீக்கப்பட்டு அனுபவ வீராங்கனை ஹர்லீன் தியோல் இணைக்கப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பராக டி20 அணியில் இருந்த நந்தினி காஷ்யப் ஆடாமலே ஒருநாள் அணியில் விலக்கப்பட்டுள்ளார். மாறாக, ஹேலி மேத்யூஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி மாற்றங்கள் ஏதுமின்றி விளையாட உள்ளது.

The post ஒரு நாள் தொடர் இன்று துவக்கம் சாதிப்பரா இந்திய மகளிர்? மல்லுக்கு நிற்கும் வெஸ்ட் இண்டீஸ் appeared first on Dinakaran.

Read Entire Article