கட்சிக்குள் அதிகார பரவலை அதிகரிக்கவும், அனைத்து மாவட்டங்களிலும் விசிக-வை பலப்படுத்தவும் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளரை நியமிக்க வேண்டும் என்பது திருச்சியில் விசிக நடத்திய ‘வெல்லும் ஜனநாயகம்’ மாநாட்டுக்கு முன்னதாக ஆதவ் அர்ஜுனா திருமாவுக்கு சொன்ன யோசனை.
ஆதவை கட்சியைவிட்டு நீக்கிவிட்டாலும் அவர் போட்டுக் கொடுத்த அந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் இப்போது தீவிரமாகி இருக்கிறார் திருமா. ஆட்சி அதிகாரத்தில் பங்கு, அதிக தொகுதிகளில் போட்டி என விசிக நிர்வாகிகள் திமுக-வுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், கட்சியைப் பலப்படுத்தும் வேலைகளில் தீவிரம் காட்டத் தொடங்கி இருக்கிறார் விசிக தலைவர் திருமாவளவன். அதன் ஒரு பகுதி தான் ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளரை நியமிக்கும் திட்டம்.