ஒரு கால பூஜை திட்டத்தில் இருக்கிற கோயில்களுக்கான நிதி உயர்த்தி தரப்படுமா..? அமைச்சர் விளக்கம்

1 week ago 5

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது எஸ்.இனிக்கோ இருதயராஜ் (திருச்சி கிழக்கு) பேசுகையில், “ஒரு கால பூஜை திட்டத்தில் இருக்கிற கோயில்களுக்கான தரப்படுகின்ற நிதி போதுமானது அளவில் இல்லை. அந்த நிதி உயர்த்தி தரப்படுமா” என்றார்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில்,‘‘திருக்கோயிலில் பணியாற்றுகின்ற அர்ச்சகர்களுக்கும் பணியாளர்களுக்கும் எந்தவிதமான பணி பாதுகாப்பும் இல்லை, எந்தவிதமான ஊதியமும் இல்லை என்பதை அறிந்து முதல்வர் அனைவரையும் வங்கி கணக்கை தொடங்கச் செய்து மாதம் ஆயிரம் ரூபாயை 18 ஆயிரம் திருக்கோயில்களின் அர்ச்சகர்களுக்கும் வழங்குகின்ற ஒரு உன்னத திட்டத்தை ஏற்படுத்தியவர். அதோடு நிற்கவில்லை.

அந்த திருக்கோயிலிலே பணிபுரிகின்ற அர்ச்சகர்களின் பிள்ளைகள் உயர்கல்வி பயில 2023ம் ஆண்டு 400 மாணாக்கர்களுக்கும், 2024ம் ஆண்டு 500 மாணாக்கர்களுக்கும் கல்வி உதவித்தொகையாக தலா ரூ.10,000 மற்றும் கல்வி உபகரணங்களையும் வழங்கினார். இந்த ஆண்டு சுமார் 600 மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்படி அனைத்து வசதிகளையும் செய்து தந்து பாராமுகமாக இருந்த ஒருகால பூஜை திட்ட திருக்கோயில் அர்ச்சகர்களுக்கு முதல்வர் பொறுப்பேற்ற பிறகு தான் அந்த ஒரு கால பூஜை திட்டத்தில் செயல்படுகின்ற அனைத்து திருக்கோயில்களிலும் இன்றைக்கு ஆண்டவன் மகிழ்ச்சியோடு இருக்கின்றார்” என்றார்.

The post ஒரு கால பூஜை திட்டத்தில் இருக்கிற கோயில்களுக்கான நிதி உயர்த்தி தரப்படுமா..? அமைச்சர் விளக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article