தஞ்சாவூர், அக். 29: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா மண்டலக் கோ ட்டை நவநீத கிருஷ்ண சாமி (பஜனை மடம்) கோயிலுக்கு சொந்தமாக மண்டலக் கோட்டை வருவாய் கிராமத்தில் மொத்தம் 2.55 ஏக்கர் பரப்பளவுள்ள புன்செய் நிலங்கள் உள்ளது. மேலும் கலிதீர்த்த அய்யனார் கோயிலுக்கு சொந்தமாக மண்டலக் கோட்டை கிராமத்தில் மொத்தம் 3.58 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த 2 கோயில்களுக்கு சொந்தமாக மொத்தம் 6.13 ஏக்கர் நிலம் உள்ளது.
இந்த நிலம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், ஆணையர் ஆகியோர் வழிகாட்டுதலின்படி தஞ்சை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் கவிதா தலைமையில்கோயில் நிலங்கள் தனி தாசில்தார் பார்த்தசாரதி முன்னிலையில் இந்து சமய அறநிலையத் துறையின் ஒரத்தநாடு சரக ஆய்வாளர் மற்றும் கோயில் செயல் அலுவலர் பொம்முதுரை, கோயில்களின் பணியாளர்கள் மூலம் சுவாதீனம் எடுக்கப்பட்டு, நிரந்தர அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இந்த நிலங்களின் மொத்த வழிகாட்டி மதிப்பின்படி ரூ.13 லட்சத்து 79 ஆயிரத்து 250 ஆகும். மீட்டெடுக்கப்ப ட்ட நன்செய் மற்றும்புன் செய் நிலங்கள் விரைவில் பொது ஏலத்திற்கு கொ ண்டு வரப்பட உள்ளது.
The post ஒரத்தநாடு அருகே 2 கோயில்களுக்கு சொந்தமான ரூ.13 லட்சம் நிலம் மீட்பு appeared first on Dinakaran.