புதுடெல்லி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மக்களவை தொகுதியில் 2019 முதல் 2014 வரை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர் பிரபல சினிமா தயாரிப்பாளர் எம்.வி.வி. சத்யநாராயணா. இவர் முதியோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான வீட்டுமனைக்கு ஆந்திர அரசால் ஒதுக்கப்பட்ட 12.51 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக போலீசார் பதிவு செய்த வழக்கு அடிப்படையில் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. இது தொடர்பாக விசாகப்பட்டினத்தில் சத்யநாராயணாவுக்கு சொந்தமான 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி 300க்கும் மேற்பட்ட விற்பனைப் பத்திரங்களை பறிமுதல் செய்தது.
The post ஒய்எஸ்ஆர் முன்னாள் எம்பியின் 300 விற்பனை பத்திரம் பறிமுதல்: அமலாக்கத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.