ஒன்றிய பாஜ அரசை கண்டித்து தமிழக மாணவர்கள் நடத்தும் போராட்டம் வெல்லட்டும்: துரை வைகோ அறிக்கை

2 months ago 7

சென்னை: மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்றிய பாஜ அரசின் இந்தி திணிப்பு, தேசிய கல்விக் கொள்கை, யுஜிசி வரைவு 2025 மற்றும் தமிழ்நாட்டுக்கு கல்வி மற்றும் பேரிடர் நிவாரணநிதி வழங்க மறுக்கும் எதேச்சதிகார போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணியளவில், மதிமுக மாணவரணி அங்கம் வகிக்கும் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், திமுக மாணவர் அணி தலைமையில் மாவட்ட அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மும்மொழி திட்டம் மூலம் இந்தி, சமஸ்கிருத மொழிகளை திணிக்க முயற்சிக்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து தமிழ்நாட்டு மாணவர்கள் கூட்டமைப்பு நடத்த உள்ள கண்டன ஆர்ப்பாட்டம் வெல்லட்டும் என வாழ்த்துகிறேன்

The post ஒன்றிய பாஜ அரசை கண்டித்து தமிழக மாணவர்கள் நடத்தும் போராட்டம் வெல்லட்டும்: துரை வைகோ அறிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article