ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து இ.கம்யூ, விசிக, அமைப்புகள் 6 இடங்களில் ஆர்ப்பாட்டம்

4 weeks ago 7


பெரம்பூர்: மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய பேச்சுக்கு, இந்தியா முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இதைக்கண்டித்து நேற்று திமுகவினர் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இன்றும் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் ஒரு பகுதியாக, வியாசர்பாடி எம்கேபி நகர் காவல்நிலையத்துக்கு உட்பட்ட அம்பேத்கர் கல்லூரி எதிரே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் வடசென்னை மாவட்ட தலைவர் சந்தோஷ்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இதேபோன்று ஓட்டேரி காவல்நிலையத்துக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் ஸ்டீபன்சன் சாலை சந்திப்பு பகுதியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பூர் தொகுதி செயலாளர் ராஜு தலைமை வகித்தார். ஓட்டேரி மேம்பாலம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவிக நகர் தொகுதி செயலாளர் செல்வராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் வியாசர்பாடி ஸ்டீபன்சன் சாலை சந்திப்பு ஜீவா ரயில் நிலையம் அருகே வடசென்னை மாவட்ட மகளிரணி செயலாளர் பாலா மணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் வியாசர்பாடி மெகிஷின்புரம் அம்பேத்கர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சென்னை மாவட்ட குழு சார்பில், வடசென்னை மாவட்ட தலைவர் சரவண தமிழன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின்போது, அமித்ஷாவை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

The post ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து இ.கம்யூ, விசிக, அமைப்புகள் 6 இடங்களில் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article