*மாவட்ட திமுக பொறுப்பாளர் அப்துல்வஹாப் எம்எல்ஏ பேச்சு
நெல்லை : தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் சந்திப்பு ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கல்லூர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
நெல்லை மாநகர செயலாளர் சுப்பிரமணியன், மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் கேஆர்.ராஜூ, முன்னாள் எம்எல்ஏக்கள் மாலைராஜா, ஏஎல்எஸ்.லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் அப்துல் வஹாப் எம்எல்ஏ பேசியதாவது,
தமிழர் நாகரிகம் 3,400 ஆண்டுகளுக்கு முற்பட்டது. தொன்மையான தமிழ் நாகரிகத்தை அனைவரும் அறியும் வகையில் நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் தமிழர் நாகரிகத்தை வெளிப்படுத்தும் அனைத்து பொருட்களும் அங்கு காட்சிப்படுத்தப்பட உள்ளன. கல் தோன்றி, மண் தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய மூத்த மொழி தமிழ். கீழடி அகழாய்வு மூலம் தமிழர் நாகரிகம், உலகிற்கே வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் தொன்மையான தமிழ் நாகரிகத்தை அறியலாம். ஆனால் தமிழ் மொழிக்கு இருப்பது போல இந்திக்கு எந்த வரலாறும் கிடையாது. இந்தி பேசும் மாநிலமான குஜராத்தில் குஜராத்தி, மகாராஷ்டிராவில் மராத்தி பேசுகின்றனர். தமிழினத்தை அழிப்பதற்காக இந்தியை திணிக்கின்றனர். எந்த வழியாக இந்தியை கொண்டு வந்தாலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நின்று எதிர்த்து வெற்றி காண்போம் என்றார்.
சிறுபான்மை நல உரிமை பிரிவு மாநில தலைவர் டிபிஎம்.மைதீன்கான் பேசுகையில், இந்தி திணிப்பை எதிர்க்க எந்த போராட்டத்திற்கும் தயார் என்றார். ஆர்ப்பாட்டத்தில் இந்தி திணிப்பை அனுமதியோம், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும், யுஜிசி வரைவு விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மாவட்ட அவைத்தலைவர் முருகன், மாவட்ட துணைச் செயலாளர்கள் எஸ்வி.சுரேஷ், தர்மன், கிரிஜாகுமார், மாநகர துணைச் செயலாளர்கள் பிரபுபாண்டியன், சுதாமூர்த்தி, அப்துல்கையூம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வில்சன் மணித்துரை, மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், துணை அமைப்பாளர் வக்கீல் அலிப் மீரான், முன்னாள் மேயர் பிஎம்.சரவணன், பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன், பாளை அண்டன் செல்லத்துரை, மேலப்பாளையம் துபை சாகுல், மண்டல தலைவர்கள் தச்சை ரேவதிபிரபு,
பாளை பிரான்சிஸ், நெல்லை மகேஸ்வரி, மேலப்பாளையம் கதீஜா இக்லாம் பாசிலா, ஒன்றிய செயலாளர்கள் மானூர் அன்பழகன், அருள்மணி, மாரியப்பன், பேரங்காடி முன்னாள் சேர்மன் பல்லிக்கோட்டை செல்லத்துரை, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பொன்னையா பாண்டியன், மாவட்ட விவசாய தொழிலாளரணி அமைப்பாளர் முத்தமிழ் ராஜாபாண்டியன், மாநகர பொருளாளர் பூக்கடை அண்ணாதுரை, கவுன்சிலர்கள் உலகநாதன், டாக்டர் சங்கர், ரம்ஜான்அலி, மாரியப்பன், மன்சூர், அலி ஷேக் மன்சூர், அல்லாபிச்சை, சுப்புலட்சுமி, ராஜேஸ்வரி, கோகுலவாணி, சகாய ஜூலியட்மேரி, பேச்சியம்மாள், ஆமீனா சாதிக், முன்னாள் கவுன்சிலர்கள் பாலன் என்ற ராஜா, சைபுன்னிசா, ரேவதி அசோக், பேரூர் செயலாளர்கள் சங்கர்நகர் செல்வபாபு, நாரணம்மாள்புரம் பேச்சிக்குட்டி,
தகவல் தொழில்நுட்ப மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் காசிமணி, தொமுச அரசன்ராஜ், கருப்பசாமி, மகாவிஷ்ணு, எல்ஐசி பேச்சிமுத்து, அமிதாப், வல்லநாடு முத்து, மாநில பொறியாளரணி துணைச் செயலாளர் ராஜவர்மன், சிறுபான்மை நல உரிமை பிரிவு தலைவர் முகம்மது அலி, சுடலைக்கண்ணு, வக்கீல் தினேஷ், தயாசங்கர், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் அனிதா, தொண்டரணி அமைப்பாளர் தொப்பி மைதீன்,
மேலப்பாளையம் பகுதி பொருளாளர் எட்வர்ட் ஜான், வட்ட செயலாளர்கள் மேகை செல்வம், உஸ்மான், மாரிமுத்து, பேச்சாளர்கள் சிபா ராவணன், நெல்லை முத்தையா, திராவிட மணி, மாணவரணி ஆறுமுகராஜா, அப்துல்சுபஹானி, தச்சை சண்முகராஜ், கால்வாய் துரைப்பாண்டியன், பொறியாளரணி சாய்பாபா, தொண்டரணி ஷேக் உஸ்மானி, வட்ட பிரதிநிதி கருணாநிதி, மகளிரணி ஜாய் மரகதம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் நெல்லை மாவட்ட தலைவர் அருள் உள்ளிட்ட பலர் பங்கேற்று இந்தி எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பினர்.
The post ஒன்றிய அரசை கண்டித்து நெல்லையில் ஆர்ப்பாட்டம் இந்தியை எந்த வழியாக கொண்டு வந்தாலும் எதிர்ப்போம் appeared first on Dinakaran.