ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

2 days ago 5

ராஜபாளையம், ஏப்.17: நேஷனல் ஹெரால்டு வழக்கில் மோடி அரசாங்கம் அமலாக்கத்துறையை ஏவி காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ததை கண்டித்து ராஜபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ராஜபாளையம் ஜவஹர் மைதானத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர் காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் ரெங்கசாமி தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் பொன் சக்தி மோகன், நகர்மன்ற உறுப்பினர் சங்கர்கணேஷ், மாணவர் காங்கிரஸ் மான் மற்றும் நகர வட்டார நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஏற்பாட்டினை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கர்கணேஷ் செய்திருந்தார்.

The post ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article