ஒன்றிய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

2 months ago 8

 

திருவாரூர், டிச. 11: ஒன்றிய அரசை கண்டித்து திருவாரூரில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சூரிய சக்தி மின்சாரம் கொள்முதல் செய்வதற்காக ரூ.2 ஆயிரத்து 100 கோடி அளவில் லஞ்சம் அளித்த விவகாரத்தில் அமெரிக்க பங்கு சந்தை ஆணையமும் நீதி துறையும் குற்றம் சாட்டியுள்ள தொழிலதிபர் கௌதம் அதானி மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், மணிப்பூர் கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்திட வேண்டும், வரலாறு காணாத அளவில் உயர்ந்து வரும் உணவு பொருட்களின் விலை உயர்வினை கட்டுப்படுத்திட வேண்டும்,

பொருளாதார வளர்ச்சியில் பெரும் சரிவைகண்டுள்ள மக்கள் விரோத கொள்கையை கைவிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஒன்றிய அரசை கண்டித்தும் திருவாரூரில் நேற்று பழைய பேருந்து நிலையம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் (பொ) கேசவராஜ்தலைமையிலும், முன்னாள் எம்எல்ஏ உலகநாதன் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் தவபாண்டியன், மாநில குழு உறுப்பினர் சந்திரசேகர்ஆசாத், விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஜோசப். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ராஜா, இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் துரைஅருள்ராஜன், மாவட்ட பொருளாளர் வீரபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article