ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான ரிட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள ‘சைட் இன்ஜினியர்’ பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள் விவரம்:
1. Site Surveyor: 1 இடம் (பொது). தகுதி: சிவில் இன்ஜினியரிங்கில் பி.இ., அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. Site Engineer (Works): 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1). தகுதி: சிவில் இன்ஜினியரிங்கில் பி.இ., அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. Site Engineer (Bridge): 2 இடங்கள் (பொது). தகுதி: சிவில் இன்ஜினியரிங்கில் பி.இ., அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. Quality Control Expert: 1 இடம் (பொது). தகுதி: சிவில்/எலக்ட்ரிக்கல்/மெக்கானிக்கல்/எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்கில் பி.இ., அல்லது டிப்ளமோ தேர்ச்சி.
மேற்குறிப்பிட்ட அனைத்து பணிகளுக்கும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
அனைத்து பணிகளுக்கும் வயது: 55க்குள் இருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.www.rites.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.01.2025.
The post ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் சிவில் இன்ஜினியர் appeared first on Dinakaran.