‘ஒன்றிய அரசின் பேரிடர் நிதி சோளப் பொறி கொடுத்து யானை பசி  தீர்க்கும் செயல்’ - முத்தரசன்

2 weeks ago 3

சென்னை: ஒன்றிய அரசின் பேரிடர் நிதி, சோளப் பொறி கொடுத்து யானை பசி தீர்க்கும் செயலாகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக இயற்கை பேரிடர் தாக்குதலால் பல்லாயிரம் கோடி பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. பெஞ்ஜல் புயல், பெருமழை, வெள்ளம் போன்ற பேரிடர் வரையான இழப்புகளுக்கு நிவாரணம் வழங்கவும், மறுசீரமைப்பு செய்யவும் 37 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் கூடுதலான பேரிடர் நிவாரண நிதி மற்றும் பேரிடர் துயர் தணிப்பு நிதி தேவை என தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசிடம் முறையிட்டுள்ளது.

Read Entire Article