ஒன்றிய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் 200 இடங்கள்

2 hours ago 3

1. டெக்னீசியன் (பிட்டர்): 95 இடங்கள். சம்பளம்: தினமும் ரூ.1583. வயது: 18 முதல் 30க்குள்.தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பிட்டர் டிரேடில் ஐடிஐ படிப்பை முடித்து ஒரு வருட அப்ரன்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
2. டெக்னீசியன் (எலக்ட்ரீசியன்): 95 இடங்கள். சம்பளம்: தினமும் ரூ.1583. வயது: 18 முதல் 30க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியன் டிரேடில் ஐடிஐ படிப்பை முடித்து ஒரு வருட அப்ரன்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
3. டெக்னீசியன் (வெல்டர்): சம்பளம்: தினமும் ரூ.1536. வயது: 18 முதல் 30க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் வெல்டர் டிரேடில் ஐடிஐ படிப்பை முடித்து அப்ரன்டிஸ் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 10.05.2025 தேதியின்படி கணக்கிடப்படும். அதிகபட்ச வயது வரம்பில் ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.1180/-. (எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது). இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.www.nclcil.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.05.2025.

The post ஒன்றிய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் 200 இடங்கள் appeared first on Dinakaran.

Read Entire Article