டெல்லி: இந்திய ராணுவ தளங்களை பாகிஸ்தான் குறி வைத்தது; பாகிஸ்தான் ஏவுணைகளை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு தடுத்து அழித்ததாகவும், பாகிஸ்தான் ராணுவத்தை குறி வைத்து தாக்கவில்லை எனவும் பாகிஸ்தான் மீதான தாக்குதல் குறித்து இந்திய வெளியுறவுத் துறை, ராணுவம் விளக்கமளித்துள்ளது.
இது தொடர்பாக கர்னல் சோஃபியா குரேஷி அளித்த பேட்டியில்:
பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் தோல்வியில் முடிந்தது. எல்லையை ஒட்டிய 15 நகரங்கள் மீதான பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர், லூதியானா, பூஜ், ஜம்மு உள்ளிட்ட இடங்களை நோக்கி டிரோன்கள், ஏவுகணைகளை வீசி பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது என்று கூறினார்.
வெளியுறவுத்துறை செயலாளர் அளித்த பேட்டியில்:
ஏப்ரல் 22-ம் தேதி நடைபெற்ற பஹல்காம் தாக்குதல் தான் பதற்றதிற்கு காரணம். நாம்(இந்தியா) பதற்றத்தை உருவாக்கவில்லை. பிரச்னையை பெரிதாக்க பாகிஸ்தான் முயற்சிக்கிறது; நாம் பதிலடி மட்டுமே தருகிறோம்; பஹல்காம் தாக்குதலை கண்டித்து ஐ.நா. அறிக்கை வெளியிட முடிவு செய்தபோது பாகிஸ்தான் குறுக்கிட்டது. ஐ.நா. அறிக்கையில் TRF பெயரை குறிப்பிட வேண்டாம் என பாகிஸ்தான் தடுத்தது. மசூத் அஸார் உள்ளிட்ட ஏராளமான பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தஞ்சம் அளித்தது.
ராணுவ நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தான் வதந்திகளை பரப்புகிறது. இந்தியாவின் ட்ரோன்களை பாகிஸ்தான் தகர்த்ததாக கூறப்படுவதும் உண்மைக்கு புறம்பானது. தீவிரவாதிகளை குறிவைத்து மட்டுமே தாக்குதலில் ஈடுபட்டோம். இந்தியா நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்கள் பயங்கரவாதிகளே. மதம் சார்ந்த இடங்களை இந்தியா தாக்கி அழிக்கவில்லை . இந்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு ராணுவ மரியாதை அளித்து இறுதிச் சடங்கு நடந்துள்ளது. ராணுவ அதிகாரிகள் இறுதி அஞ்சலி செலுத்துகின்றனர்.
தேசிய கொடியை போர்த்தியதை கூட பார்க்க முடிந்தது.
ராணுவ மோதல் அதிகரிப்பதை இந்தியா ஒருபோதும் விரும்பவில்லை. பாகிஸ்தான் மேற்கொண்டு தாக்கினால் உரிய பதிலடி தரப்படும். இந்தியாவின் அணைகள் போன்ற கட்டமைப்பின் மீது தாக்கினால் தக்க பதிலடி தரப்படும். சிந்து நதி ஒப்பந்தத்தை பாகிஸ்தான்தான் மீறியது. இரு நாடுகளிடையே பதற்றம் தணிவதும், தொடர்வதும் பாகிஸ்தான் கையில் உள்ளது என அவர் கூறினார்.
The post இந்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு ராணுவ மரியாதையுடன் இறுதி சடங்கு நடதுள்ளது: வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி appeared first on Dinakaran.