ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் கலாசார பயிற்சி மையத்தில் காலியாக உள்ள ஆபீசர் மற்றும் கிளார்க் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. Accounts Officer: 4 இடங்கள். (பொது-3, ஒபிசி-1) வயது: 35க்குள். தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் கேஷ் அக்கவுன்ட் மற்றும் பட்ஜெட்டில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. Administrative Officer: 1 இடம். (பொது) வயது: 35க்குள். தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் நிர்வாகப் பிரிவில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. Copy Editor: 2 இடங்கள். (பொது-1, ஒபிசி-1) வயது: 30க்குள். தகுதி: இந்தி/ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் இதழியல்/எடிட்டிங்கில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. Video Editor: 1 இடம். (பொது) வயது: 30க்குள். தகுதி: பிலிம் எடிட்டிங்கில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.
5. Documentation Assistant: 1 இடம். (பொது) வயது: 30க்குள். தகுதி: ஏதாவது ஒரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் டாக்குமென்டேஷன் பிரிவில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
6. Craft Instructor & Co-ordinator: 2 இடங்கள். (பொது-1, ஒபிசி-1) வயது: 30க்குள். தகுதி: ஏதாவது ஒரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் கிராப்ட்டில் டிப்ளமோ தேர்ச்சியும், 2 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
7. Hindi Translator: 1 இடம். (பொது) வயது: 30க்குள். தகுதி: இந்தி மற்றும் ஆங்கில பாடங்களுடன் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்று, இந்தியிலிருந்து ஆங்கிலம், ஆங்கிலத்திலிருந்து இந்தியில் மொழிபெயர்ப்பு செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.
8. Accounts Clerk: 2 இடங்கள். (பொது) வயது: 30க்குள். தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் நிதி/அக்கவுன்ட்ஸில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
9. Lower Division Clerk: 6 இடங்கள். (பொது-3, ஒபிசி-1, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1) வயது: 30க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு ஆங்கிலம் 35 வார்த்தைகள் அல்லது இந்தி 30 வார்த்தைகள் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
10. Data Entry Operator: 2 இடங்கள். (பொது-1, ஒபிசி-1) வயது: 30க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு ஆங்கிலம் 35 வார்த்தைகள் அல்லது இந்தி 30 வார்த்தைகள் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
கட்டணம்: பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.500/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.250/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.ccrtindia.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.10.2024.
The post ஒன்றிய அரசின் கலாச்சார பயிற்சி மையத்தில் ஆபீசர், கிளார்க் பணிகள் appeared first on Dinakaran.