போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.206 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

14 hours ago 2

சென்னை: போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.206 கோடி நிதி தமிழ்நாடு அரசு ஒதுக்கியது. ரூ.206 கோடியை குறுகிய கால கடனாக போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இது தொடா்பாக போக்குவரத்துச் செயலா் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்த அரசாணையில் 2023 ஏப்ரலில் ஓய்வு, விருப்ப ஓய்வு மற்றும் உயிரிழந்த தொழிலாளா்களுக்கு பணப்பலன் வழங்க ரூ. 206.63 கோடி ஒதுக்கீடு செய்யும்படி போக்குவரத்து துறைத் தலைவா் அலுவலகம் சாா்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதைப் பரிசீலித்த அரசு, ஓய்வூதியா்களுக்கு பணப்பலன்களை வழங்கும் வகையில் ரூ. 206.63 கோடியை குறுகிய காலக் கடன் என்ற அடிப்படையில் ஒதுக்கி ஆணையிடுகிறது. இந்தத் தொகையை சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா்கள் உரியவா்களுக்கு வழங்க வேண்டும். 2024-25 நிதியாண்டுக்குள் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.206 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Read Entire Article