ஒன்றிய அரசால் பறிக்கப்பட்ட தமிழ்நாட்டு உரிமைகளை மீட்டெடுக்க உறுதியேற்போம்: திருமாவளவன் அறிக்கை

3 months ago 13

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மொழி அடிப்படையில், 1956 நவம்பர் 1ம்தேதி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இந்நாளை அண்டை மாநில அரசு‘மாநிலம் உருவான நாளாக’ கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டை மையமாகக் கொண்ட சென்னை மாகாணத்திலிருந்து மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது பல பகுதிகளை நாம் அண்டை மாநிலங்களுக்கு இழக்க நேர்ந்துவிட்டது.

எனவே, இந்த நாள் நமக்கு இழப்பு ஏற்பட்ட நாளாகும். இனிமேல் தமிழ்நாட்டிலிருந்து பறிபோன நிலப் பகுதிகளை மீட்பதற்கு வாய்ப்பில்லை. நம்மிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்போம் என்கிற அடிப்படையில் இந்நாளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ‘தமிழர் இறையாண்மை நாள்’ என கடைபிடித்து வருகிறோம். ஒன்றிய அரசால் பறிக்கப்பட்ட தமிழ்நாட்டு உரிமைகளை மீட்ப தற்கு உறுதி ஏற்கும் நாள்இது.தமிழர் இறையாண்மையைப் பாதுகாக்கவும் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கவும் இந்நாளில் உறுதியேற்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ஒன்றிய அரசால் பறிக்கப்பட்ட தமிழ்நாட்டு உரிமைகளை மீட்டெடுக்க உறுதியேற்போம்: திருமாவளவன் அறிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article