ஒட்டன்சத்திரம், பிப். 8: ஒட்டன்சத்திரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள், வியாபாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விற்பனைக்குழு செயலாளர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார். ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சிவராமகிருஷ்ணன் பேசுகையில், ‘வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக துறையின் ஒற்றை உரிமம் பெற வேண்டும்.
மாதந்தோறும் கணக்கறிக்கை 10ம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மக்காச்சோளத்தின் மதிப்பில் 1 சதவீதத்தை சந்தை கட்டணமாக விற்பனை குழுவிற்கு செலுத்த வேண்டும். ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து மற்ற பகுதிக்கு எடுத்து செல்லும் விளைபொருளுக்கு அனுமதி சீட்டு பெற வேண்டும்’ என்றார்.
The post ஒட்டன்சத்திரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.