ஒடிசா: சாணக் குவியலில் இருந்து ரூ. 20 லட்சம் மீட்பு

3 months ago 14

பாலசோர்,

ஐதராபாத்தில் உள்ள விவசாயம் சார்ந்த நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த கோபால் பெஹரா என்பவர் அந்த நிறுவனத்தின் லாக்கரில் இருந்த ரூ.20 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். அவரை ஐதராபாத் போலீசார் தேடி வருகிறன்றனர்.

இந்த நிலையில் கோபால் பணத்தை ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள படமந்தருணி கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டில் மறைத்து வைத்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஒடிசா போலீசாருடன் இணைந்து ஐதராபாத் போலீசார் கோபாலின் மாமியார் வீட்டில் சோதனை நடத்தினர்.

சோதனையில் அவர்களது வீட்டில் இருந்த மாட்டுச் சாணக் குவியலுக்குள் ரூ. 20 லட்சத்தை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. பணத்தை மீட்ட போலீசார் தலைமறைவாக உள்ள கோபால் மற்றும் அவரது மைத்துனர் ரவீந்திரனை தேடி வருகின்றனர்.

Read Entire Article