தருமபுரி / மேட்டூர்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 4-ம் தேதி காலை விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று முன்தினம் விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. இந்நிலையில், நேற்று காலை நீர்வரத்து சற்றே அதிகரித்து விநாடிக்கு 11,000 கனஅடியாக உயர்ந்தது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு கடந்த சிலநாட்களாக நீர்வரத்து அதிகரித்தும், சரிந்தும் காணப்படுகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 10,566 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 9,929 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி, கால்வாய் பாசனத்துக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் நேற்று 106.92 அடியாகவும், நீர் இருப்பு 74.10 டிஎம்சியாகவும் இருந்தது.