திருச்சி மாவட்டத்தில் மே 23ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

5 hours ago 4

திருச்சி, மே 21: திருச்சி மாவட்டத்தில் மே 23ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. திருச்சி மாவட்ட வேலைநாடுனர்கள் கலந்துகொண்டு பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு, திருச்சி மாவட்டத்திலுள்ள வேலைநாடுநர்களை தனியார் துறைகளில் பணியமா்த்தும் முயற்சியாக, திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இந்த முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு தனியார் துறைகளை சார்ந்த 20ம் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தோ்ந்தெடுக்க உள்ளனர். மேலும், இந்த முகாமில் திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தோ்வு செய்யவுள்ளனர்.

10ம் வகுப்பு தேர்ச்சி, ப்ளஸ் 2, ஐடிஐ, இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகள் மற்றும் பொறியியல் படிப்புகள் போன்ற கல்வி தகுதிகள் உள்ள 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைநாடுநர்கள், மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுய விவரக்குறிப்பு (பயோ டேட்டா),அனைத்து கல்விச்சான்றுகளின் நகல்கள், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்களின் நேர்காணலில் கலந்து கொண்டு, வேலைநாடுநர்களை தேர்ந்தெடுக்கின்றனர். வேலைநாடுநர்கள் தாங்கள் விரும்பும் வேலைவாய்ப்பினை பெற இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

திருச்சி மாவட்ட வேலைநாடுநர்கள் மே 23ம் தேதி காலை 10.30 மணி முதல் திருச்சி, கண்டோன்மென்ட், பாரதிதாசன் சாலை, மேற்கு தாலுக்கா அலுவலகத்தின் பின்புறம் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் வந்து முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், தகவல்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 0431-2413510, 94990-55901 என்ற எண்ணிலோ தொடர்புகொள்ளலாம். இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

The post திருச்சி மாவட்டத்தில் மே 23ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article