மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக ஒகேனக்கல் காவிரியில், நேற்று முன்தினம் விநாடிக்கு 6,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று நண்பகல் 17,000 கனஅடியாக அதிகரித்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால், ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் தடை விதித்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதனால், நேற்று பல்வேறு இடங்களிலிருந்து சுற்றுலா வந்தவர்கள், ஏமாற்றத்துடன் திரும்பினர்.
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 4,938 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 6,445 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 12,000 கனஅடியிலிருந்து 10,000 கனஅடியாகவும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 700 கனஅடியிலிருந்து, 500 கனஅடியாகவும் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 89.67 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 89.26 அடியானது. நீர் இருப்பு 51.81 டிஎம்சியாக உள்ளது.
The post ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க தடை பரிசல் சவாரி ரத்து appeared first on Dinakaran.