ஐரோப்பிய செயற்கைக்கோளுடன் டிச.4ம் தேதி விண்ணில் ஏவப்படும் பிஎஸ்எல்வி சி 59: இஸ்ரோ தகவல்

3 hours ago 1

சென்னை: ஐரோப்பிய செயற்கைக்கோளுடன் டிச.4ம் தேதி பிஎஸ்எல்வி சி 59 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இஸ்ரோ தனது தனித்துவ திட்டங்கள் மற்றும் செயற்கோள்களை விண்ணில் ஏவுவதோடு மட்டும் இல்லாமல், தனியார் செயற்கைக்கோள் மற்றும் வெளிநாட்டு செயற்கைகோள்களையும் விண்ணில் செலுத்துகிறது. இதற்காக நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறு​வனம் வெளி​நாட்டு செயற்​கைக்​கோள்களை விண்​ணுக்கு அனுப்பும் வர்த்தக நடவடிக்கைகளை மேற்​கொண்டு வருகிறது. இதுவரை 430க்​கும் மேற்​பட்ட வெளி​நாட்டு செயற்​கைக்​கோள்களை நியூ ஸ்பேஸ் நிறு​வனம் வெற்றிகரமாக விண்​ணில் செலுத்​தி​யுள்​ளது.

பெரும்​பாலான உலக நாடு​களின் விண்​வெளி ஆய்வு நடவடிக்கைகளுக்கு இஸ்ரோ பங்களித்து வரும் நிலை​யில், அண்மை​யில் ஐரோப்பிய விண்​வெளி ஆய்வு நிறு​வனத்​துடன் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறு​வனம் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்​கொண்​டது. அதன்​படி, ப்ரோபா-3 எனப்​படும் இஎஸ்ஏ நிறு​வனத்​தின் இரு செயற்​கைக்​கோள்களை பிஎஸ்​எல்வி சி-59 ராக்​கெட் மூலம் புவியி​லிருந்து 60,500 கிமீ தொலை​வில் உள்ள சுற்று​வட்டப் பாதை​யில் நிலை நிறுத்தி சூரியனின் புற வெளி கதிர்கள் ஆய்வு செய்​யப்பட உள்ளன.

அந்த இரு செயற்​கைக் கோள்​களும் 150 மீ தொலை​வில் அருகருகே பயணித்து சூரியனின் புறவெளியைச் சுற்றி ஆய்வு நடவடிக்கைகளை மேற்​கொண்டு தரவுகளை கட்டுப்​பாட்டு அறைக்கு அனுப்ப உள்ளன. அதன்​படி, வரும் டிச.4ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி​கோட்​டா​வில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்​திலிருந்து மாலை 4.08 மணிக்கு ராக்​கெட் ஏவப்படும் என்றும், பார்​வை​யாளர்கள் அதனை நேரில் காண்​ப​தற்கு ​முன்​ப​திவு செய்​து​கொள்​ளலாம் என்​றும் இஸ்​ரோ​வின் எக்ஸ் பக்​கத்​தில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

The post ஐரோப்பிய செயற்கைக்கோளுடன் டிச.4ம் தேதி விண்ணில் ஏவப்படும் பிஎஸ்எல்வி சி 59: இஸ்ரோ தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article