ஐப்பசி திருக்கல்யாண திருவிழா; 32 ஆண்டுகளுக்கு பின் அன்ன வாகனத்தில் திருவீதி உலா கண்ட நெல்லை காந்திமதி அம்மன்

3 weeks ago 6

நெல்லை,

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன், நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையிலும்,மாலையிலும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனையும், வீதி உலாவும் நடைபெற்று வருகிறது.

அதன்படி, 6-ம் திருவிழாவான நேற்று காலையில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனைதையும் சிறப்பு பூஜை நடைபெற்றது. நேற்று இரவில் காந்திமதி அம்பாள் அன்ன வாகனத்தில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து அன்ன வாகனத்தில் வீதிஉலா நடைபெற்றது.

அன்ன வாகனம் 32 ஆண்டுகளுக்கு முன்பு பழுதடைந்தது. அதனால் அன்ன வாகன வீதி உலா நடைபெறாமல் இருந்து வந்தது. 32 ஆண்டுகளுக்கு பிறகு புதிதாக செய்யப்பட்ட அன்னவாகனத்தில் நேற்று இரவு காந்திமதிஅம்பாள் வீதி உலா வந்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


32 ஆண்டுகளுக்கு பிறகு அன்னவாகனத்தில் திருவீதி உலா கண்ட நெல்லை காந்திமதி அம்மன்#ThanthiTv | #amman | #TamilNadu pic.twitter.com/1YhwKAWXC6

— Thanthi TV (@ThanthiTV) October 23, 2024


Read Entire Article