டெல்லி அணிக்கு எதிரான 46வது லீக் போட்டியில் பெங்களூரு அணி நட்சத்திரப் பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், 4 ஓவர்கள் வீசி, 33 ரன்கள் மட்டுமே விட்டுத் தந்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் மூலம், 185 இன்னிங்ஸ்களில் 193 விக்கெட்களை வீழ்த்தியுள்ள அவர், ஐபிஎல் வரலாற்றில் 2வது அதிகபட்ச விக்கெட்டுகளை எடுத்த சாதனையாளராக உருவெடுத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில், யுஸ்வேந்திர சஹல், 214 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். புவனேஷ்வர், சராசரியாக ஒரு விக்கெட்டுக்கு 27.01 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். ஒரு ஓவருக்கு சராசரியாக அவர் தந்த ரன்கள், 7.60. புவனேஷ்வர் குமாரின் ஸ்டிரைக் ரேட் 21.31.
The post ஐபிஎல்லில் 193 விக்கெட் புவனேஷ்வர் அசத்தல் appeared first on Dinakaran.