ஐபிஎல்:மும்பை வீரர் பும்ரா புதிய சாதனை

6 hours ago 2

மும்பை,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று மாலை 3.30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற 45-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி

20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த சூர்யகுமார் யாதவ்(4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்) 28 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். லக்னோ அணியில் அதிகபட்சமாக மயங்க் யாதவ் மற்றும் ஆவேஷ் கான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடர்ந்து 216 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி லக்னோ அணி களமிறங்கியது. 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் பும்ரா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார்.

இந்த நிலையில், இந்த போட்டியில் 4 விக்கெட்டுகள் வீழ்த்திய பும்ரா புதிய சாதனை படைத்துள்ளார். மும்பைக்கு அணிக்காக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் விக்கெட் எண்ணிக்கை 174ஆக உயர்ந்தது.

இதன் மூலம் மும்பை அணிக்காக அதிக விக்கெட் எடுத்தவரான மலிங்காவின் (170 விக்கெட்) சாதனையை தகர்த்துள்ளார் .

Read Entire Article