ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக ஓம்கார் சால்வி நியமனம்

1 month ago 6

பெங்களூரு: ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக ஓம்கார் சால்வி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது மும்பை ரஞ்சி அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ஓம்கார் சால்வி, அடுத்த சீசன் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் இணைவார்.

46 வயதான ஓம்கார் சால்வி, முன்பு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் உதவி பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். மும்பை ரஞ்சி அணியின் பயிற்சியாளராக இருக்கும் சால்வியின் பதவிக்காலம் மார்ச் 2025ல் முடிவடைய உள்ளது.

புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக ஓம்கார் சால்வி நியமிக்கப்பட்டது குறித்து பெங்களூரு அணி தெரிவித்துள்ளதாவது; “தற்போது மும்பை ரஞ்சி அணியின் பயிற்சியாளராக உள்ள ஓம்கார் சால்வி ஆர்சிபியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 8 மாதங்களில், ரஞ்சி கோப்பை, இரானி கோப்பை மற்றும் ஐபிஎல் கோப்பையை வென்ற அணிக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். ஐபிஎல் 2025க்கு முன் அவர் அணியில் இணைவார். அதுவரை உள்நாட்டு கிரிக்கெட் சீசனின் கடமையை அவர் செய்வார்” என தெரிவித்துள்ளது

இந்த ஆண்டின் தொடக்கத்தில் பெங்களூரு அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் 2025 சீசனுக்காக பெங்களூரு அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் வழிகாட்டியாக நியமிக்கப்பட்டார். தற்போது புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக ஓம்கார் சால்வி நியமிக்கப்பட்டுள்ளார்.

தினேஷ் கார்த்திக் மற்றும் ஓம்கார் சால்வி இருவரும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக கடந்த காலத்தில் ஒன்றாகப் பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 17 வருடங்களாக கோப்பைக்காக போராடும் ஆர்சிபி அணிக்கு இந்த இருவரும் இணைந்து கோப்பையை வென்று கொடுப்பார்கள் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

The post ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக ஓம்கார் சால்வி நியமனம் appeared first on Dinakaran.

Read Entire Article