லக்னோ: ஐபிஎல் தொடரின் 13வது லீக் போட்டி லக்னோவில் இன்றிரவு நடக்கிறது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ அணியை பொறுத்தவரையில் மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன் கடந்த இரு போட்டிகளில் நல்ல ரன்களை ஸ்கோர் செய்து உள்ளனர். கேப்டன் ரிஷப் பண்ட் இன்னும் பார்மிற்கு திரும்பவில்லை. அவரது மோசமான ஃபார்ம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. அவர் இப்போட்டியில் பார்மிற்கு திரும்பினால் அந்த அணிக்கு பேட்டிங்கில் கூடுதல் பலம் கிடைக்கும். பினிஷிங்கில் டேவிட் மில்லர் பலமாக பார்க்கப்படுகிறார். பந்துவீச்சில் ஷர்துல் தாக்கூர் கடந்த 2 போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். அவருக்கு துணையாக பிரின்ஸ் யாதவ் உள்ளார். சுழற்பந்து வீச்சில் தீக்னேஷ் மற்றும் பிஸ்னோய் உள்ளனர்.
பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் நல்ல பார்மில் உள்ளார். அவர் கடந்த போட்டியில் 97 ரன்கள் எடுத்தார். பினிஷிங்சில் மேக்ஸ்வெல் மற்றும் ஸ்டாய்னிஸ் உள்ளனர்.பந்து வீச்சில் அர்ஷதீப் சிங், மார்கோ யான்சன் மற்றும் சாஹல், விஜயகுமார் வய்சாக் பலமாக உள்ளனர். குறிப்பாக கடந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசினார். 2 அணிகளும் இந்த தொடரில் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. எனவே 2வது வெற்றிக்காக இன்று இரு அணியினரும் முயற்சிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இதுவரை இந்த இரு அணிகள் 4 முறை மோதியதில் லக்னோ 3 முறையும் பஞ்சாப் 1 முறையும் வென்றுள்ளது.
The post ஐபிஎல் டி20 தொடர்: லக்னோ-பஞ்சாப் இன்று மோதல் appeared first on Dinakaran.