கலசப்பாக்கம்: கலசப்பாக்கம் அருகே சிவ சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி மாத பிரம்மோற்சவம் இன்றுகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த எலத்தூர்மோட்டூர் நட்சத்திர கோயில் பகுதியில் உள்ள சுயம்பு சிவ சுப்பிரமணிய சுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாத பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்தாண்டு பிரம்மோற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 4.30 மணியளவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் ெசய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.
இதைத்தொடர்ந்து உற்சவ மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். 7.30 மணியளவில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பிரம்மோற்சவ கொடியை ஏற்றினர். ெதாடர்ந்து கொடிமரம் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் ‘அரோகரா, அரோகரா’ என பக்தியுடன் தரிசனம் செய்தனர். பிரம்மோற்சவத்தையொட்டி தினமும் சுவாமி இரவில் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 8ம் ேததியும், சுவாமி திருக்கல்யாணம் 10ம் தேதியும் நடைபெற உள்ளது. 12ம் தேதி கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.
The post கலசப்பாக்கம் அருகே இன்று சிவ சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி பிரம்மோற்சவம் துவக்கம் appeared first on Dinakaran.