
மும்பை,
சென்னை, இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான அட்டவணை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த தொடர் அடுத்த மாதம் 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில்,சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் தென் ஆப்பிரிக்கா வீரர் வியான் முல்டர் சேர்க்கப்பட்டுள்ளார் . ஐ.பி.எல். ஏலத்தில் ஐதராபாத் அணி இங்கிலாந்தை சேர்ந்த ஆல்-ரவுண்டர் பிரைடன் கார்ஸை ஏலம் எடுத்திருந்தது.இவர் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம் பிடித்திருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும்போது அவருக்கு காயம் ஏற்பட்டது.இதனால் அவருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்காவின் வியான் முல்டரை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 75 லட்சம் ரூபாய்க்கு மாற்று வீரராக எடுத்துள்ளது.