துபாய்: ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடரில், புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான பைனலில் தென் ஆப்ரிக்கா – நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் இரு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதின. இந்த சுற்றின் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடித்த ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் மோதிய தென் ஆப்ரிக்கா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று பைனலுக்கு தகுதி பெற்றது.
2வது அரையிறுதியில் நியூசிலாந்து அணி 8 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது. இந்த நிலையில், சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான பைனலில் தென் ஆப்ரிக்கா – நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. இப்போட்டி, துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இரவு 7.30க்கு தொடங்குகிறது. ஏற்கனவே ஆஸ்திரேலியா 6 முறை, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தலா ஒரு முறை பட்டம் வென்றுள்ள நிலையில், இன்றைய பைனலின் முடிவில் புதிய சாம்பியன் யார் என்பது முடிவாகும்.
The post ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இன்று தென் ஆப்ரிக்கா – நியூசி. மோதல் appeared first on Dinakaran.