ஐக்கிய அரபு அமீரகத்தில் யூத குரு கொலை: இஸ்ரேல் கடும் கண்டனம்

2 months ago 10

டெல் அவிவ்: இஸ்ரேல் ஐக்கிய அரபு அமீரகம் இடையே கடந்த 2020ம் ஆண்டு ஆப்ரகாம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஏராளமானோர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வணிகம் மற்றும் சுற்றுலாவுக்காக சென்று வருகின்றனர். அதன்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சபாத் என்ற ஆர்த்தடாக்ஸ் யூத குழுவில் இஸ்ரேலிய மால்டோவான் ஸ்வி கோகன் என்பவர் மத குருவாக பணியாற்றி வந்தார்.

இவர் கடந்த வியாழக்கிழமை முதல் மாயமானதாக அவரது குடும்பத்தினரும், இஸ்ரேலும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஸ்வி கோகன் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. “இது கொடூரமான யூத எதிர்ப்பு பயங்கரவாதம். கொலைக்கு காரணமான குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

The post ஐக்கிய அரபு அமீரகத்தில் யூத குரு கொலை: இஸ்ரேல் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article