ஜெயங்கொண்டம், நவ.27: ஜெயங்கொண்டத்தில் ஆதிதிராவிட மாணவர்கள் ஐஏஎஸ் பணிக்கு மிகச்சிற ந்த பயிற்சி மையத்தில்பயி ற்சி பெற ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படுவதாக முன்னாள் அமைச்சரும், தாட்கோ சேர்மனுமான மதிவாணன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியில் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் தாட்கோ மூலம் வழங்கப்பட்ட மானிய கடன்களுக்கான பொருட்கள் மற்றும் கட்டுமான பணிகளை முன்னாள் அமைச்சரும் தாட்கோ சேர்மேனுமான மதிவாணன் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணனுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதில் மீன்சுருட்டியில் ரூ.3 கோடியே 71 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பள்ளி மாணவர்களுக்கான விடுதி கட்டுமான பணிகள் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்திற்கு ரூ. 60 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீடுகள் ஆதிதிராவிட மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ரூ.77 லட்சத்து 89 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அறிவு சார் மைய கட்டுமான பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார் அப்போது கட்டுமான பணிகளை தரமாக விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பின்னர் செய்தியாளகளை சந்தித்த தாட்கோ சேர்மன் மதிவாணன், ஆன்லைனில் விண்ணப்பிக்கப்பிக்கும் தகுதி வாய்ந்த ஆதிதிராவிட மக்களுக்கு உடனடியாக மானியத்துடன் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஆதிதிராவிடர் விடுதிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்படும் தாட்கோ மூலம் நிலம் வாங்கும் திட்டத்தில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. ஆதி திராவிட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கறவை மாடுகள் வாங்கவும் மாணவ மாணவிகள் உயர்கல்வி பெறுவதற்கு கல்விக் கடனும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஐஏஎஸ் போன்ற குடிமையியல் பணிக்கு பயிற்சி பெற விரும்பும் ஆதிதிராவிட இளைஞர்களுக்கு மிகச்சிறந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே தமிழ்நாடு அரசு ஆதிதிராவிட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறினார்.
The post ஐஏஎஸ் போன்ற குடிமையியல் கல்வி பயிற்சி பெற ஆதிதிராவிட மாணவர்களுக்கு ₹1 லட்சம் வரை மானியம்: தாட்கோ சேர்மன் மதிவாணன் தகவல் appeared first on Dinakaran.