ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல கோர்ட் அனுமதி

3 weeks ago 5

புதுடில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா குழுமத்திற்கு வழங்கப்பட்ட அன்னிய செலாவணி அனுமதிகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.

தனது கம்பெனி விஷயமாக ஜனவரி 4ம் தேதி வெளிநாடுகளுக்கு செல்ல இருப்பதால் அனுமதி வழங்கும்படி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். அதற்கு அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்தது. மனுவை விசாரித்த நீதிபதி காவேரி பவேஜா, ‘‘மனுதாரர் ஏற்கனவே உச்சநீதிமன்றம்,சிறப்பு நீதிமன்ற அனுமதியுடன் வெளிநாடு சென்றுள்ளார். அப்போது அவர் தனக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தவில்லை. இதை கருத்தில் கொண்டு அவருக்கு தற்போது அனுமதி வழங்கப்படுகிறது’’ என்றார்.

The post ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல கோர்ட் அனுமதி appeared first on Dinakaran.

Read Entire Article