ஐ.பி.எல்.-ல் பங்கேற்க பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரிலிருந்து விலகிய கார்பின் போஷுக்கு பாக்.வாரியம் நோட்டீஸ்

6 hours ago 3

லாகூர்,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

இதில் கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

முன்னதாக இந்த சீசனுக்கான மும்பை அணியில் இடம்பெற்றிருந்த லிசார்ட் வில்லியம்ஸ் காயம் காரணமாக 2025 ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்கா வீரர் கார்பின் போஷ் மும்பை அணியில் சேர்க்கப்பட்டார் .

ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பெஷாவர் சல்மி அணிக்காக விளையாடதேர்ந்தெடுக்கப்பட்ட கார்பின் போஷ் அதிலிருந்து விலகினார்.

இந்நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரிலிருந்து விலகியதற்கான காரணம் குறித்து விளக்கமளிக்குமாறு கார்பின் போஷுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Read Entire Article