
கொல்கத்தா,
நடப்பு ஐ.பி.எல். தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெற உள்ளது. அதன்படி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
நேற்று முன்தினம் நடக்க இருந்த இந்த ஆட்டத்துக்கு ராமநவமி கொண்டாட்டம் காரணமாக பாதுகாப்பு அளிக்க முடியாது என்று கொல்கத்தா போலீசார் கைவிரித்ததால் 2 நாள் தள்ளிவைக்கப்பட்டு இன்று நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்படது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரகானே பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி லக்னோ முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இரு அணிகளுக்கான பிளெயிங் லெவன் பின்வருமாறு:-
கொல்கத்தா: டி காக், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ரகானே (கேப்டன்), ரிங்கு சிங், ரசல், ரமந்தீப் சிங், வைபவ் அரோரா, ஸ்பென்சர் ஜான்சன், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.
லக்னோ: மிட்செல் மார்ஷ், மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன்), ஆயுஷ் பதோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாகூர், ஆகாஷ் தீப், அவேஷ் கான், திக்வேஷ் சிங் ரதி