ஐ.பி.எல்.: முதல் இந்திய வீரராக வரலாற்று சாதனை படைத்த சாய் சுதர்சன்

1 week ago 3

அகமதாபாத்,

10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அரங்கேறிய 23-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 217 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 82 ரன்கள் அடித்தார். ராஜஸ்தான் தரப்பில் துஷர் தேஷ்பாண்டே, தீக்ஷனா தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

அடுத்து 218 ரன் இலக்கை நோக்கி பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 159 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் குஜராத் 58 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஹெட்மேயர் 52 ரன்கள் அடித்தார். பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளும், ரஷித்கான், சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

அகமதாபாத் மைதானத்தில் சாய் சுதர்சன் தொடர்ச்சியாக அடித்த 5-வது அரைசதம் இதுவாகும். இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் ஒரே மைதானத்தில் தொடர்ச்சியாக 5 அரைசதங்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார்.

ஒட்டு மொத்தத்தில் இந்த சாதனையை படைத்த 2-வது வீரர் சாய் சுதர்சன் ஆவார். இதற்கு முன்னர் ஏபி டி வில்லியர்ஸ் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்த சாதனையை படைத்துள்ளார்.

Read Entire Article