ஐ.பி.எல்.: மாபெரும் சாதனையில் சூர்யகுமார் யாதவை முந்திய பட்லர்

13 hours ago 2

அகமதாபாத்,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 51-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 224 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 76 ரன்களும், பட்லர் 64 ரன்களும், சாய் சுதர்சன் 48 ரன்களும் அடித்தனர். ஐதராபாத் தரப்பில் உனத்கட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 225 ரன் இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 186 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் குஜராத் 38 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் அபிஷேக் சர்மா 74 ரன்கள் அடித்தார். குஜராத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா மற்றும் சிராஜ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த ஆட்டத்தில் பட்லர் 42 ரன்கள் அடித்திருந்தபோது ஐ.பி.எல். தொடரில் 4 ஆயிரம் ரன்கள் மைல்கல்லை எட்டினார். இந்த 4 ஆயிரம் ரன்களை 2,677 பந்துகளில் எட்டியுள்ளார்.

இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் குறைந்த பந்துகளில் 4 ஆயிரம் ரன்கள் அடித்த வீரர்களின் சாதனை பட்டியலில் 3-வது இடத்தில் இருந்த சூர்யகுமார் யாதவை முந்தியுள்ளார்.

அந்த பட்டியல்:

1. கிறிஸ் கெயில் - 2,653 பந்துகள்

2. ஏபி டி வில்லியர்ஸ் - 2,658 பந்துகள்

3. ஜோஸ் பட்லர் - 2,677 பந்துகள்

4. சூர்யகுமார் யாதவ் - 2,714 பந்துகள்

5. வார்னர் - 2,809 பந்துகள்

Read Entire Article