ஐ.பி.எல்.: மாபெரும் சாதனை பட்டியலில் இணைந்த சாய் சுதர்சன்

1 day ago 4

முல்லன்பூர்,

ஐ.பி.எல். தொடரில் முல்லன்பூரில் நேற்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஆடின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற மும்பை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 228 ரன்கள் குவித்தது.

மும்பை தரப்பில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 81 ரன்கள் எடுத்தார். குஜராத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 229 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களம் கண்டது. குஜராத்தின் தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் களம் கண்டனர். இதில் கில் 1 ரன்னில் அவுட் ஆனார்.

தொடர்ந்து களம் கண்ட குசல் மெண்டிஸ் 20 ரன், வாஷிங்டன் சுந்தர் 48 ரன் எடுத்து அவுட் ஆகினர். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய சாய் சுதர்சன் அரைசதம் அடித்த நிலையில் 80 ரன்களில் அவுட் ஆனார். தொடர்ந்து ரூதர்போர்டு மற்றும் ராகுல் திவேதியா ஜோடி சேர்ந்தனர். இதில் ரூதர்போர்டு 24 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து ஷாரூக் கான் களம் இறங்கினார்.

இறுதியில் குஜராத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 208 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 20 ரன் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கான தகுதி சுற்று 2-க்கு முன்னேறியது.

குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 80 ரன்கள் எடுத்தார். நடப்பு தொடரில் குஜராத் வீரர் சாய் சுதர்சன் 15 ஆட்டங்களில் 759 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் அவர் மாபெரும் சாதனை பட்டியல் ஒன்றில் இணைந்துள்ளார். அதாவது ஒரு ஐ.பி.எல். சீசனில் 750+ அதிகமான ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சுதர்சன் இணைந்துள்ளார்.

ஒரு ஐ.பி.எல். சீசனில் 750+ அதிகமான ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியல்:

விராட் கோலி - 973 ரன் (2016)

சுப்மன் கில் - 890 ரன் (2023)

ஜாஸ் பட்லர் - 863 ரன் (2022)

டேவிட் வார்னர் - 848 ரன் (2016)

சாய் சுதர்சன் - 759 ரன் (2025)

Read Entire Article