ஐ.பி.எல். போட்டி: பஞ்சாப் அணிக்கு 172 ரன்கள் வெற்றி இலக்கு

2 days ago 3

லக்னோ,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 12 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன.

இந்த சூழலில், இந்த தொடரில் லக்னோவில் இன்று நடைபெறும் 13வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்சை எதிர்கொண்டது. அதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி லக்னோ அணி முதலாவதாக பேட்டிங் செய்தது.

முடிவில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் லக்னோ அணி 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக பூரண் 44 ரன்களும், ஆயுஷ் பதோனி 41 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் அணியின் சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதனைத்தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி பேட்டிங் செய்து வருகிறது.

Read Entire Article